search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    ஊட்டியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் மசோதாக்கள், மின்சார வாரிய திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஊட்டி:

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் மசோதாக்கள், மின்சார வாரிய திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து, மின்வாரியம் போன்ற அரசு துறைகளில் ஓய்வு நாளிலேயே ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு, 3 வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×