என் மலர்
செய்திகள்

தற்கொலை
சிதம்பரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சிதம்பரம் அருகே தாயுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் அபுபக்கர் தெருவை சேர்ந்தவர் தாஜூதீன். இவரது மனைவி ஹஜ்ஜிராபானு (வயது 38). தாஜூதீன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஹஜ்ஜிராபானுவுடன், அவரது தாய் நூர்ஜகான் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஹஜ்ஜிராபானுவிடம், நூர்ஜகான் பக்கத்து வீட்டு பெண்களிடம் அதிகம் பேசாமல் வீட்டு வேலைகளை செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹஜ்ஜிராபானு வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து குடித்தார். பின்னர் மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஹஜ்ஜிராபானு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






