என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 15,106ஆக உயர்வு

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 106ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 22 ஆயிரத்து 496 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 3 ஆயிரத்து 95 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

    13 ஆயிரத்து 594 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 19 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 184 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    நேற்று மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. விருதுநகர் நாச்சிதெருவைச் சேர்ந்த 48 வயது நபர், ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்த 40 வயது நபர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 57 வயது நபர், மீசலூரைச் சேர்ந்த 9 வயது சிறுமி மற்றும் சிதம்பராபுரம், ஆவியூர், கல்குறிச்சி, காரியாபட்டி, பூமாலைப்பட்டி, அருப்புக்கோட்டை, உலக்குடி, முக்குளம், ஆத்திப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 106 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படாத நிலையே நீடிக்கிறது.

    கிராமப்புறங்களிலேயே பெரும்பாலும் பாதிப்பு இருந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×