என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
விபத்து பலி
மோட்டார் சைக்கிள் மோதி கடலை வியாபாரி பலி
By
மாலை மலர்23 Sep 2020 7:32 AM GMT (Updated: 23 Sep 2020 7:32 AM GMT)

மோட்டார் சைக்கிள் மோதி கடலை வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:
சேலம் மாவட்டம் ஜோடுகுளி அடுத்த எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் மாதையன் (வயது 60). கடலை வியாபாரி. இவர் நேற்று நல்லம்பள்ளியில் கூடிய வாரச்சந்தையில் கடலை வியாபாரம் செய்து விட்டு சாப்பிடுவதற்காக நல்லம்பள்ளியில் தர்மபுரி-சேலம் பைபாஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மாதையன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாதையன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×