search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    ராணுவ கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    ராணுவ கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல் தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2020-ம் ஆண்டில் ஜூலை மாதம் 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஏழாம் வகுப்பு படிக்கின்ற அல்லது தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். 11 முதல் 13 வயது வரை அதாவது 2.7.2008-க்கு முன்னதாகவும் 1.7.2009-க்கு பிறகு பிறந்து இருக்கக்கூடாது. இதற்கான விண்ணப்பத்தினை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி என்ற பெயரில் பொதுப்பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் ரூ.555-க்கும் காசோலை எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்துடன் மாதிரி வினாத்தாள்களும் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் விரைவு தபாலில் சென்னை டி. என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் 1, 2-ந் தேதி நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். பின்னர் 6.4.2021 அன்று வாய்மொழித் தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு www.rimc.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் 7-ம் வகுப்பு பயிலும் மற்றும் முடித்த சிறார்கள் எச்சரிக்கைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×