என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடி அகழாய்வு (கோப்புப்படம்)
    X
    கீழடி அகழாய்வு (கோப்புப்படம்)

    கீழடியில் புதிதாக மேலும் 2 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு

    கீழடியில் புதிதாக மேலும் 2 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடந்து வருகிறது.
    திருப்புவனம்:

    திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் 6-வது கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.

    இதில் இதுவரை சுமார் 900 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இதில் விலங்கின எலும்பு கூடு, பல வரிசை கொண்ட செங்கல் சுவர், முதுமக்கள் தாழிகள், தங்க நாணயம், சுடுமண் உலை, நந்தை ஓடுகள், குழந்தையின் முழு உருவ எலும்பு கூடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.

    கீழடியில் ஏற்கனவே 18 குழிகள் வரை தோண்டப்பட்டு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

    தற்போது மேலும் 2 குழிகள் புதிதாக தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    கீழடியில் இதுவரை மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வருகிற 30-ந் தேதி வரை அரசு அனுமதி வழங்கி உள்ளதால் இந்த பணிகளை வேகமாகவும், விரைந்து முடிக்கவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
    Next Story
    ×