search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகக்கவசம்
    X
    முகக்கவசம்

    ஊட்டியில் மாஸ்க் அணியாமல் சுற்றிய 100 பேருக்கு அபராதம்

    ஊட்டியில் மாஸ்க் அணியாமல் வந்த 100 பேர் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர். தொடர்ந்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. தொற்று அறிகுறி நபர்களை சுகாதார துறையினர் கண்டறிந்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், பொது போக்குவரத்து தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளான சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிவது, ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது சோப்பு போட்டு கை கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    குறிப்பாக பொது இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிவதை உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் உறுதிப்படுத்தும் வகையில் நகரின் முக்கிய இடங்களில் ஊழியர்கள் நின்று, மாஸ்க் அணியாமல் வருபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

    நேற்று ஊட்டி நகரில் பஸ் ஸ்டாண்ட், சேரிங்கிராஸ், மெயின் பஜார், ஏ.டி.சி., பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களை கண்டறிந்து 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

    அதன்படி நேற்று நகரில் மாஸ்க் அணியாமல் வந்த 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர். தொடர்ந்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதேபோன்று திருப்பூர் மாவட்டம் மூலனூரில் மண்டல துணை தாசிதார் செந்தில் பிரபு, மூலனூர் பேரூராட்சி செயல்அலுவலர் முருகேசன், நாகராஜ் மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட மூலனூர் தலைமை காவலர் தங்கதுரை ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் நேற்று பொது இடங்கள் மற்றும் மளிகை கடை, ஜவுளிகடைகள், நகைகடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை செய்தனர். இதில் மாஸ்க் அணியாமல் வந்த 52-பேர்களுக்கு தலா ரூ.200- அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×