என் மலர்

  செய்திகள்

  வீடு புகுந்து கொள்ளை
  X
  வீடு புகுந்து கொள்ளை

  ஆனையூர் அருகே வீடு புகுந்து நகை- பணம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆனையூர் அருகே வீடு புகுந்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை:

  மதுரை ஆனையூர் சஞ்சீவி நகர் கருப்பசாமி கோவில் குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ண ராஜா (வயது 57). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்று விட்டார்.

  இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின் பக்க கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

  இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய முத்து கிருஷ்ணராஜா பின் பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  இதையடுத்து அவர் பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  இது தொடர்பாக முத்து கிருஷ்ணராஜா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×