என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பல்லடம் அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடம் அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் குட்டையில் சேவல் கட்டு சூதாட்டம் நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அமலதாஸ் தலைமையில் சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டபோது ஒரு கும்பல் இவர்களை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றது. 

  அவர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் இடுவாயை சேர்ந்த மாரிமுத்து (வயது 32) சின்னாண்டிபாளையத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் (28), வடுகபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (29), நீலியைச்சேர்ந்த தேவராஜ் (24), என்பதும் அவர்கள் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது, இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் மற்றும் ரூ.1,800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×