என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ் பரிசோதனை
  X
  கொரோனா வைரஸ் பரிசோதனை

  சென்னையில் 42,532 காய்ச்சல் முகாம்கள்- 22,873 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இதுவரை 42 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 24 லட்சத்து 40 ஆயிரத்து 209 பேர் கலந்துகொண்டனர்.
  சென்னை:

  சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 42 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 24 லட்சத்து 40 ஆயிரத்து 209 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 477 பேருக்கு காய்ச்சல், சளி அறிகுறி இருந்தது.

  இதையடுத்து அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் 22 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

  மேற்கண்ட தகவலை பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
  Next Story
  ×