என் மலர்
செய்திகள்

மருத்துவ முகாம்
ஆம்பூர் நகராட்சி சார்பில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை
ஆம்பூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆம்பூர்:
ஆம்பூர் நகராட்சி, ஆம்பூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ராமு கண்காணிப்பில் மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று வயதானோர், உடல் நலம் குன்றியவர்கள் என கண்டறிந்து மருத்துவ உதவி செய்து வருகின்றனர்.
மேலும் பெத்லகேம் 5-வது தெருவில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன், டாக்டர்கள் ஞானம், அருணா, சுகாதார அலுவலர் பாஸ்கர், நகராட்சி அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story