என் மலர்

  செய்திகள்

  வீடு புகுந்து கொள்ளை
  X
  வீடு புகுந்து கொள்ளை

  எருமப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எருமப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  எருமப்பட்டி:

  எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் சுஜாதா (வயது 53). இவருடைய கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் சுஜாதா நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை 5 மணி அளவில் திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 3¼ பவுன் நகை, ரூ.7 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சுஜாதா எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×