என் மலர்

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மோட்டார்சைக்கிள் திருடிய 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முத்துப்பேட்டை அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை டி.டி.பி. ரோட்டில் வசிப்பவர் அப்துல் காதர். இவரது மகன் ஆரிப் முகமது (வயது 30). இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் காலையில் வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

    இதுகுறித்து ஆரிப் முகமது முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியை சேர்ந்த ரியாஸ்கான்(19) மற்றும் 17 வயதை சேர்ந்த 2 பேர், 18 வயதை சேர்ந்த ஒருவர் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×