என் மலர்

  செய்திகள்

  எஸ்.பி.வேலுமணி
  X
  எஸ்.பி.வேலுமணி

  மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வேளாண் எந்திர கருவிகள் - அமைச்சர் வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான வேளாண் எந்திரங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
  கோவை:

  கோவை மாவட்டம் பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட இக்கரைபோளுவாம்பட்டி மற்றும் தேவராயபுரம் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கு, மகளிர் திட்டம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளின் மூலம் வேளான் வாடகை எந்திர மையம் அமைக்க ரூ.20 லட்சம் மதிப்பில் டிராக்டர், களையெடுக்கும் கருவி, மருந்து தெளிப்பான் கருவி ஆகிய வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண் உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

  கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரத்தில் மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளையும் நகரப்பகுதிகளுக்கு இணையாக மேம்படுத்தும் நோக்கில் கோவை மாவட்டத்தின் அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், சாலை, குடிநீர், சிறுபாலங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் போன்றவற்றை சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

  இதன்படி தற்போது பூலுவபட்டி பேரூராட்சியில் 14-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் கைகாட்டி பிரிவு முதல் சென்னனூர் ரோடு வரை தார்சாலை மற்றும் கருப்பராயன் கோவில் ரோடு பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, மோளபாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி, வடிவேலாம்பாளையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் பிரதான சாலை முதல் பள்ளி வரை தார்சாலை மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, மெட்டுவளவு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்கா அமைக்கும் பணி, ஆதிதிராவிடர் காலனியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் பொது கழிப்பிடம் அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

  மேலும் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாக கட்டிடம் கட்டும் பணி, நாதேகவுண்டன்புதூரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி, ஆலாந்துறை பேரூராட்சிக்குட்பட்ட காளிமங்கலம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.48 லட்சம் மதிப்பில் மாரப்பன் தோட்டம் முதல் தர்மராஜா கோவில் வரை தார்சாலை மற்றும் காளிமங்கலம் காலனி வீதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, முகாசிமங்கலம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, 14-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பில் காமாட்சியம்மன் கோவில் வீதி மற்றும் வன்னிமரத்து வீதி சாலை மேம்பாடு மற்றும் 12-வது வார்டு, 14-வது வார்டு பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.3.79 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையடுத்து பூலுவப்பட்டி பேரூராட்சி வடிவேலாம்பாளையத்தில் 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சமுதாயநலக்கூடத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்கு எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.


  இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொறுப்பு) ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அமுல் கந்தசாமி, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் என்.கே.செல்வதுரை, மாவட்ட பொருளாளர் என்.எஸ்.கருப்புசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜி.கே.விஜயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் டி.பி.வேலுச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் போளுவாம்பட்டி ராஜா, இளைஞர், இளம் பெண்கள் பாசறை தெற்கு மாவட்ட தலைவர் விராலியூர் நிஷ்கலன், ஒன்றிய அவைத்தலைவர் கே.ஜெயபால், ஆலாந்துறை மணிகண்டன், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் அஞ்சுதா, மேற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கெம்பனூர் கே.கதிரவன், தொண்டாமுத்தூர் நகர செயலாளர் கே.எஸ்.சங்கர், வடிவேலம்பாளையம் கே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×