என் மலர்

  செய்திகள்

  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேல்
  X
  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேல்

  திருப்பூர் தெற்கு தொகுதி மார்க்சிஸ்டு கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ., கொரோனாவுக்கு பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் தெற்கு தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேல் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

  திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 69). திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வாக இருந்த இவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

  கடந்த 7-ந் தேதி இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து தங்கவேல் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். 9-ந் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

  இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தங்கவேல் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

  திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,446 ஆக உயர்ந்தது. மேலும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 59 வயது மூதாட்டி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

  இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.  இதில் 15 பேர் பெண்கள், 70 பேர் ஆண்கள்.
  Next Story
  ×