search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சென்னையில் 978 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

    தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 495 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 97 ஆயிரத்து 066 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 227 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 649 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் மட்டும் 88,562 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 58,03,778 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 14
    செங்கல்பட்டு - 267
    சென்னை -978
    கோவை - 428
    கடலூர் - 253
    தர்மபுரி - 99
    திண்டுக்கல் - 66
    ஈரோடு -136
    கள்ளக்குறிச்சி - 86
    காஞ்சிபுரம் - 133
    கன்னியாகுமரி - 109
    கரூர் - 43
    கிருஷ்ணகிரி - 149
    மதுரை - 78
    நாகை - 153
    நாமக்கல் - 95
    நீலகிரி -61
    பெரம்பலூர் -17
    புதுக்கோட்டை - 77
    ராமநாதபுரம் - 23
    ராணிப்பேட்டை - 88
    சேலம் - 289
    சிவகங்கை - 50
    தென்காசி - 81
    தஞ்சை - 145
    தேனி - 79
    திருப்பத்தூர் - 41
    திருவள்ளூர் -299
    திருவண்ணாமலை - 144
    திருவாரூர் - 147
    தூத்துக்குடி - 83
    திருநெல்வேலி - 108
    திருப்பூர் - 256
    திருச்சி - 79
    வேலூர் - 125
    விழுப்புரம் - 175
    விருதுநகர் - 39
    விமான நிலைய கண்காணிப்பு
    வெளிநாடு - 0
    உள்நாடு - 1
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

    மொத்தம் - 5,495
    Next Story
    ×