என் மலர்

  செய்திகள்

  அபராதம்
  X
  அபராதம்

  முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
  நன்னிலம்:

  நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் அலுவலர்கள் நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களை கண்காணித்து அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து ரசீது வழங்கி வருகிறார்கள். இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் கூறியதாவது:-

  கடந்த 5 தினங்களாக நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ரூ.200அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கான தொகையை பெற்றுக்கொண்டு ரசீது வழங்கி வருகிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  நன்னிலம் பகுதியில் கடந்த 5 நாட்களில் ரூ.8,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  Next Story
  ×