என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  தஞ்சையில் குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் குண்டர் சட்டத்தில் கைதான 5 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
  தஞ்சாவூர்:

  தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்தவர் மாணிக்கதாஸ். இவருடைய மகன் ஜேம்ஸ்(வயது30). இவர் மீதும், அதே பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் அசோக்குமார்(27), கொடிமரத்துமூலை பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் சூர்யா(22) ஆகியோர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. 

  அதேபோல் பட்டுக்கோட்டை கண்டியன்தெருவை சேர்ந்த வெங்கடாசலம் மகன் ஆனந்த்(37) மற்றும் தஞ்சை மாதாக்கோட்டை சாலை சர்மிளாநகரை சேர்ந்த சின்னையன்(58) ஆகியோர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் சமர்ப்பித்தனர். 

  இந்த ஆவணங்களை கலெக்டர் கோவிந்தராவ் பரிசீலனை செய்து 5 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் 5 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
  Next Story
  ×