என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 330 லிட்டர் சாராயம் பறிமுதல்- 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 330 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  நன்னிலம்:

  திருவாரூர் மாவட்டம் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது போழகுடி பஸ் நிறுத்தம் அருகே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அதில் சாராயம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

  மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் கடத்தி வந்த காரைக்கால் நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.

  இதேபோல் கொல்லுமாங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 110 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, சாராயத்தை கடத்தி வந்த காரைக்கால் நெடுங்காடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (21) என்பவரை கைது செய்தனர்.

  அதேபோல் கீரனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கீரனூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (38) என்பவரை கைது செய்தனர்.
  Next Story
  ×