என் மலர்

  செய்திகள்

  முககவசம்
  X
  முககவசம்

  சங்ககிரி, அரசிராமணி பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சங்ககிரி, அரசிராமணி பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
  சங்ககிரி:

  சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் சங்ககிரி- திருச்செங்கோடு பிரிவு, பவானி மெயின் ரோடு ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தி முககவசம் அணியாமல் சென்ற 30 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் குப்பனூர் பைபாஸ் பகுதியில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரவிச்சந்திரன், சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா, மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் கெஜலட்சுமி. தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி தலைவர் சாரதா பழனியப்பன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சோதனை நடத்தி, முககவசம் அணியாமல் சென்ற 66 பேருக்கு அபராதம் விதித்து வசூலித்தனர்.

  தேவூர் அருகே அரசிராமணி பேரூராட்சி செயல் அலுவலர் நீலாதேவி தலைமையில் அலுவலர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அதில் முககவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினர்.
  Next Story
  ×