என் மலர்

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    வில்லுக்குறி அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வில்லுக்குறி அருகே பூட்டிய வீட்டில் 5 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திங்கள்சந்தை:

    வில்லுக்குறி அருகே காரவிளையை சேர்ந்தவர் ஹாஜிஸ் (வயது 42). இவருடைய மனைவி சுனிதா. இவர்கள் குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார்கள். இதனால், ஊரில் உள்ள வீடு எப்போதும் பூட்டப்பட்டிருக்கும். அதை உறவினரான கோலப்பபிள்ளை பராமரித்து வருகிறார். நேற்று காலை ஹாஜிஸ் வீட்டுக்கு கோலப்பபிள்ளை சென்றார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் அலமாரியில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கோலப்பபிள்ளை இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் ஏதேனும் தடயங்களை விட்டு சென்றனரா? என்று ஆய்வு செய்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். வீட்டில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×