என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை போலீசில் கொரோனா பாதிப்பை விட, குணமானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
சென்னை:
சென்னை போலீசில் நேற்று 7 பேர் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,316 ஆக உயர்ந்தது.
தீவிர சிகிச்சை பலனாக நேற்று வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரன், அண்ணாநகர் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சொக்கைய்யா ஆகியோர் உள்ளிட்ட 24 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள்.
இதுவரை சென்னை போலீசில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 1,965 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பை விட, குணமானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

Next Story