என் மலர்
செய்திகள்

நாராயணசாமி
ஊழியருக்கு கொரோனா: நாராயணசாமி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
நாராயணசாமியின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சட்டசபை சில நாட்கள் மூடப்பட்டது.
பின்னர் வழக்கம் போல சட்டசபையில் அமைச்சர்கள், அரசியல்கட்சி அலுவலகங்கள் இயங்கி வந்தது. இந்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால் 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சென்றார். அவர் ஜிப்மரில் பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Next Story






