என் மலர்

  செய்திகள்

  ஆர்ப்பாட்டம்
  X
  ஆர்ப்பாட்டம்

  கொரோனா பணியில் உள்ள எம்டிஎஸ் ஊழியர்களை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா பணிக்கு சென்றுள்ள எம்டிஎஸ் ஊழியர்களை உடனடியாக திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  புதுச்சேரி:

  கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணி நிரந்தரம் உறுதி செய்யப்பட்ட எம்.டி.எஸ் ஊழியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  குடிநீர் உந்து நிலையங்கள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், கழிவு நீர் உட்கோட்டம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  புதிய எம்.டி.எஸ். ஊழியர்களுக்கு பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். கொரோனா பணிக்கு சென்றுள்ள எம்.டி.எஸ். ஊழியர்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை எம்.டி.எஸ்.ஊழியர் சங்கத்தின் சார்பில் இன்று காலை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட அலுவலக வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சங்க தலைவர் முரளி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

  Next Story
  ×