என் மலர்

  செய்திகள்

  கோவில் உண்டியல் கொள்ளை
  X
  கோவில் உண்டியல் கொள்ளை

  மதுக்கூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுக்கூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மதுக்கூர்:

  மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி பிச்சினிக்காடு பகுதியில் முலைக்கொட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள உண்டியலை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் காணிக்கை பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை கோவில் கமிட்டி தலைவர் வைரவசுந்தரம் கோவிலை திறக்க வந்தபோது உண்டியல் உடைந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×