என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தொழிற்சாலையில் ரூ.50 ஆயிரம் திருடிய ஊழியர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுக்கோட்டை அருகே தொழிற்சாலையில் ரூ.50 ஆயிரம் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை அருகே சிப்காட்டில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் சிவப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 44) மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தொழிற்சாலை அறையில் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரத்தை காணவில்லை என்றும், தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து வெள்ளனூர் போலீசார் நடத்திய விசாரணையில், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியரான ஊரப்பட்டியை சேர்ந்த சந்திரபோஸ் (37) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×