என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    புதுக்கோட்டை அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 200 நாள் வேலையும், ரூ.600 கூலியும் வழங்க வேண்டும், புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×