என் மலர்

  செய்திகள்

  ரெயில்
  X
  ரெயில்

  16 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் 9 பேர் மட்டுமே பயணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் இருந்து சென்னைக்கு 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் 9 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.
  கோவை:

  கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு கோவையில் இருந்து நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

  இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் கோவையில் இருந்து சென்னைக்கு 16 பெட்டிகள் கொண்ட முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதில் கொரோனா அச்சம் காரணமாக போதிய வரவேற்பு இல்லாமல் குறைந்த பயணிகள் மட்டுமே இந்த ரெயில் பயணம் செய்தனர்.

  கோவையில் இருந்து 9 பேர் மட்டுமே பயணம் செய்தனர். அதில் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பயணம் செய்தனர்.

  அவர்கள் ரெயில் நிலையத்தில் கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ள தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

  பின்னர் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என கண்காணித்தனர். இந்த ரெயில் இன்று காலை 6 மணிக்கு சென்னையை சென்றடைந்தது.
  Next Story
  ×