என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அறந்தாங்கியில் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

    அறந்தாங்கி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஓட்டல், பஸ் நிலையம், பழக்கடைகள், ஆட்டோ நிறுத்துமிடம், சூப்பர் மார்க்கெட் ஆகிய அனைத்திலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஜவுளிக்கடை, ஓட்டல், பஸ் நிலையம், நகை ஷோ கடை, பழக்கடைகள், ஆட்டோ நிறுத்துமிடம், சூப்பர் மார்க் கெட் ஆகிய நிறுவனங்கள் அனைத்திலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.

    பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமுக இடை வெளி கடைபிடித்தல், தெர்மல் ஸ்கேனர் சோதனை கருவி, கை கழுவும் அமைப்பு, மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் போன்ற வசதிகளை கடைபிடிக்க கோரி உதவி கலெக்டர் ஆனந்த் மோகன் தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை, நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    கொரோனா பரவல் தடுப்பு விதிகளை கடைபிடிக்காத நிறுவனத்திற்கு அபராதம் ரூ.12 ஆயிரத்து 700 விதிக்கப்பட்டது. மேலும் பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், மீன் அங்காடி ஆகிய இடங்களில் நகராட்சியால் வழங்கப்பட்டு வரும் கபசுர குடிநீர் வழங்கும் பணிகள், மற்றும் மண்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாம் ஆகியவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .

    ஆய்வின் போது தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங், அறந்தாங்கி நகராட்சி பொறுப்பு ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×