என் மலர்
செய்திகள்

தற்கொலை
பூமியான்பேட்டையில் பொது கழிவறையில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை
பூமியான்பேட்டையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்தவர் சுப்புராயன். ஓட்டல் ஊழியர். இவரது தாய் சின்ன பொண்ணு (வயது 70) வயது முதிர்வு காரணமாகவும் உடல்நல குறைவாலும் இவர் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 2 நாட்களாக சின்ன பொண்ணு கடுமையான நோய் கொடுமையால் துடித்து வந்தார்.
இதனால் மனமுடைந்த சின்னபொண்ணு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை பொதுக்கழிவறைக்கு சென்ற அவர் அங்கு தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் ரெட்டியார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story






