என் மலர்

  செய்திகள்

  மழை
  X
  மழை

  குமரி மாவட்டத்தில் சாரல் மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள் மற்றும் அணைப்பகுதிகளிலும் மழை பெய்தது.
  நாகர்கோவில்:

  குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிவடைந்து, வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதன் தாக்கமாக கடந்த 3 நாட்களாக குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று காலை நல்ல மழை பெய்தது. மலையோர பகுதிகள் மற்றும் அணைப்பகுதிகளிலும் மழை பெய்தது.

  நேற்று காலை 8 மணி வரை 24 மணிநேர நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

  பூதப்பாண்டி- 1.2, களியல்- 1.1, குழித்துறை- 3.2, நாகர்கோவில்- 3.8, புத்தன்அணை- 3.2, பெருஞ்சாணி- 2.4, சுருளோடு- 5.4, குளச்சல்- 2, இரணியல்- 6.4, பாலமோர்- 2.4, மாம்பழத்துறையாறு- 2, குருந்தன்கோடு- 2.2, ஆணைக்கிடங்கு- 4.2 மழை பதிவாகி இருந்தது.

  இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணைகளின் நீர்மட்ட விவரம் வருமாறு:-

  பேச்சிப்பாறை அணை- 29.40 அடியாகவும், பெருஞ்சாணி- 60.20, சிற்றார் 1- 9.41, சிற்றார் 2- 9.51, பொய்கை அணை- 10.40 அடியாகவும் உள்ளன. மாம்பழத்துறையாறு- 49.29 அடியாகவும், முக்கடல்- 13.7 அடியாகவும் உள்ளது.
  Next Story
  ×