search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    தேனியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு போலீஸ்காரர் உயிரிழப்பு

    தேனியில் மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    தேனி:

    தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சேதுபதி மாதவன் (வயது 34) . இவர் ஊட்டியில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 18-ந்தேதி இவர் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. தொடர் சிகிச்சை பெற்றும் அவர் குணம் அடையவில்லை.

    இதையடுத்து அவர் அங்கிருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று அவருடைய உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    மூச்சுத்திணறல் பாதிப்பில் உயிரிழந்த போலீஸ்காரருக்கு கோவையில் நடத்திய பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று வந்தது. ஆனால் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடத்திய ஸ்கேன் சோதனையில் அவருக்கு நுரையீரலில் வைரஸ் தொற்று அதிக அளவில் இருப்பதாக தெரியவந்தது. இருப்பினும் அவருக்கான கொரோனா பரிசோதனை முடிவு நேற்று அறிவிக்கப்படவில்லை. உயிரிழந்த போலீஸ்காரருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
    Next Story
    ×