என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  ஆண்டிப்பட்டி அருகே வாகனம் மோதி விவசாயி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி தாலுகா கோவிந்த நகரத்தை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 45). விவசாயி. இவரது மனைவி ஜோதி. நேற்று அவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். வைகை அணை அருகே தேனி கூட்டுக்குடிநீர் திட்ட அலுவலகம் முன்பு அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ராஜகுரு சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜோதி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

  இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×