என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  ரெயிலில் பிச்சை எடுக்க தடை- புதிய சட்டம் வருகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரெயிலிலோ, ரெயில் நிலையத்திலோ பிச்சை எடுக்க தடை செய்யப்பட உள்ளது. இதற்கான புதிய சட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது.

  சென்னை:

  ரெயில்வே சட்டம் 1989 பிரிவு 144 (2)-ன்படி ரெயிலில் பிச்சை எடுப்பது குற்றமாகும். இதை மீறி பிச்சை எடுத்தால் அவர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 2-ம் சேர்த்து வழங்கப்படும்.

  ஆனால், இப்போது ரெயில்வே துறை புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

  அதன்படி ரெயிலிலோ, ரெயில் நிலையத்திலோ பிச்சை எடுப்பது குற்றமாக கருதப்படாது. ஆனால், எந்த ஒரு நபரும் ரெயில் மற்றும் ரெயில்வே துறை வளாகத்தில் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

  அதேபோல் பிரிவு 167-ன்படி ரெயில் மற்றும் ரெயில்வே வளாகத்தில் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் புகை பிடித்தால் அவர்களுக்கு ரூ. 100 அபராதம் மற்றும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இதிலும் மாற்றம் கொண்டு வர உள்ளனர்.

  அதன்படி குறிப்பிட்ட அபராதத்தை செலுத்தி விட்டால் அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாது. இந்த புதிய சட்டங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்து மற்றும் ஆலோசனைகள் கேட்கப்படுகிறது.

  கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் ரவீந்தர்சிங், துணை இயக்குனர், டி.ஜி.-வி. ரூம் நம்பர் 445, ரெயில் பவன், புதுடெல்லி என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பலாம்.

  சில வருடங்களுக்கு முன்பு டெல்லியில் பிச்சை எடுப்பது குற்றம் என சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை குற்றமாக கருதக்கூடாது என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

  அந்த அடிப்படையில் தான் ரெயிலில் பிச்சை எடுப்பதையும் குற்றமாக கருதாமல் மாற்று நடவடிக்கைகள் எடுக்க முன் வந்துள்ளனர்.

  Next Story
  ×