என் மலர்

    செய்திகள்

    ரேசன் கடை
    X
    ரேசன் கடை

    ரேசன் கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து ரேசன் கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து ரேசன் கடைகள் மற்றும் வட்டார செயல்முறை கிடங்குகள் மேற்படி அரசாணையில் உத்தரவிடப்பட்டு உள்ளவாறு அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் செயல்படாது. அதற்கு பதிலாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழக்கம் போல் செயல்படும். ரேசன் அட்டைதாரர்கள் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×