என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
புதுச்சேரியில் ஒரே நாளில் 604 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் தினமும் அதிகரித்தபடியே உள்ளன. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புதுச்சேரியில் இதற்காக வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 32 பகுதிகளில் வரும் 31ந்தேதி முதல் 6ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் ஒரே நாளில் 604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 13 ஆயிரத்து 24 ஆக உயர்வடைந்து உள்ளது. தற்போது 4 ஆயிரத்து 745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 80 பேர் குணம் அடைந்து சென்றுள்ளனர்.
Next Story






