என் மலர்
செய்திகள்

விபத்து
வேதாரண்யம் அருகே பால் வேன் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்து
வேதாரண்யம் அருகே பால் வேன் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தனியார் பால் விநியோகம் செய்யும் பால் வேன் வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரைக்கு பால் பாக்கெட்டுக்களை ஏற்றிக் கொண்டு சென்றது.
அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து அகஸ்தியன்பள்ளி பகுதியில் இரண்டு மின் கம்பங்களில் மோதி சாய்ந்தது. இதில் 2 கம்பங்கள் சேதமடைந்து மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததில் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்தது.
வேன் ஓட்டி வந்த ரஹ்மத்துல்லா(வயது26) மற்றும் மணிவண்ணன்(30) ஆகிய இருவரும் வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறினர்.
இந்த விபத்து குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story