என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ஊரடங்கை மீறியதாக 186 பேர் மீது வழக்குப்பதிவு

    ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 186 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஊரடங்கினை மீறி சாலைகளில் வாகனங்களில் சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். மொத்தம் 186 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 125 இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×