என் மலர்

  செய்திகள்

  விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
  X
  விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

  ரேசன்கடைகளில் இலவச பொருட்கள் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை மாவட்டத்தில் ரேசன்கடைகளில் இலவச பொருட்கள் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருப்பனந்தாள்:

  ரேசன் கடைகளில் டிசம்பர் மாதம் வரை சர்க்கரை, கோதுமை, அரிசி, பருப்பு, மண்எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருப்பனந்தாள் ஒன்றியம் கண்ணாரக்குடி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் நடேசன் முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் அரவிந்தசாமி, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாமிக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

  இதேபோல் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றியக்குழு சார்பில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் உமாபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் மாலதி, பாபநாசம் ஒன்றிய தலைவர் விசுவநாதன், ஒன்றிய பொருளாளர் தங்கராசு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஷேக் அலாவுதீன், மணிவேல், செல்வமேரி, அருள்ராஜ், ஜார்ஜ், ரவி, சையத் அகமது ஆகியோர் கலந்துகொண்டனர்.

  கொரோனா கால ஊரடங்கு முடியும் வரை ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கக்கோரி சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் மேலமணக்காடு, நெல்லியடிக்காடு, சுப்பம்மாள் சத்திரம், மரக்காவலசை, மருங்கப்பள்ளம், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, கீழ மணக்காடு, குருவிக்கரம்பை, பெருமகளூர், ஊமத்தநாடு, கொரட்டூர் ஆகிய இடங்களில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, நிர்வாகிகள் குத்புதீன், நாகேந்திரன், சண்முகம், நீலகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  இதே கோரிக்கையை வலியுறுத்தி பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் சுப்பையன், கோவிந்தசாமி, பெரியசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேராவூரணி ஒன்றியத்தில் பூவாளூர், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, ஆவணம், அம்மையாண்டி, சித்துக்காடு உள்ளிட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வாசு, நிர்வாகிகள் ராமலிங்கம், ராஜா முகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×