என் மலர்
செய்திகள்

சோதனை சாவடியில் இரும்பு கேட் அமைத்து பூட்டு
தாளவாடி அருகே தமிழகம்- கர்நாடகத்தை இணைக்கும் ரோட்டுக்கு கேட் அமைத்து பூட்டு
தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள ராமாபுரம் சோதனை சாவடியில் இரும்பு கேட் அமைத்து பூட்டு போட்டு சாலையை அதிகாரிகள் அடைத்தனார்.
தாளவாடி:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் இ- பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதி தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சாம்ராஜ் நகர் அருகே தமிழக எல்லையில் உள்ள தாளவாடி பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தாளவாடி பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாரதிபுரம் சோதனை சாவடியில் குழி தோண்டப்பட்டு ரோடு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள ராமாபுரம் சோதனை சாவடியில் இரும்பு கேட் அமைத்து பூட்டு போட்டு சாலையை அதிகாரிகள் அடைத்தனார். எனினும் இந்த சாலை வழியாக 108 ஆம்புலன்ஸ் செல்ல மட்டுமே அனுமதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story