search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தானியங்கி தெர்மல் ஸ்கேனர்
    X
    தானியங்கி தெர்மல் ஸ்கேனர்

    தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவி- பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர்

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க காய்ச்சல் கண்டறியும் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவியை கல்லூரி பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர்
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ராஜசேகர், பொறியாளர்கள் கார்த்திக், கோகுல்ராஜ், ராமசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் உடல் வெப்பநிலையை அளவிடும் தெர்மல் ஸ்கேனர் கருவி ஒன்றை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-.

    கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இன்று அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் உடல் வெப்பநிலையை அளவிட தெர்மஸ் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதனை நுழைவுவாயிலில் வைத்துக்கொண்டு ஒருவர் நின்றுகொண்டு, உள்ளே வருபவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்வார். வெப்ப நிலை அதிகமாக இருந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.

    தற்போது நாங்கள் ஆட்கள் இல்லாமல் தானாக இயங்கும் தெர்மல் ஸ்கேனர் கருவியை புதிதாக கண்டுபிடித்துள்ளோம். இதனை அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் நுழைவு வாயில் கதவு முன்பு வைக்க வேண்டும். யாராவது உள்ளே வந்தால் அவர்களது உடல்வெப்பநிலையை கருவி பரிசோதிக்கும். அப்போது குறிப்பிட்ட அளவு உடல் வெப்பநிலை இருந்தால் மட்டுமே கதவு திறக்கும். வெப்பம் அதிகமாக திறந்தால் கதவு திறக்காது. அவர்கள் உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×