search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் கேசி கருப்பணன்
    X
    தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் கேசி கருப்பணன்

    பவானியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை அமைச்சர் ஆய்வு

    பவானியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு செய்தார். ஒவ்வொரு குடும்பத்தினரும் கபசுர குடிநீர் குடிக்கவும் அறிவுறுத்தினார்.
    பவானி:

    பவானி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இதுவரை 10 பேர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதியை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    பவானி மேற்கு தெரு, குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சங்கமம் தெரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்-மனைவிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியுடன் அங்கு சென்று பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் அரசு அதிகாரிகளிடமும், சுகாதாரப் பணியாளர்களிடமும் காலை, மாலை இருவேளை மருந்து தெளிக்கவும், சுகாதாரமான குடிநீர் வழங்கவும் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு குடும்பத்தினரும் கபசுர குடிநீர் குடிக்கவும் அறிவுறுத்தினார்.

    அப்போது ஜம்பை வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் மகேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், பவானி ஒன்றியக் குழு தலைவர் பூங்கோதை வரதராஜ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி மன்ற செயலாளர் சண்முகம் ஆகியோர் அமைச்சருடன் இருந்தனர்.
    Next Story
    ×