search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு - கோப்புப்படம்
    X
    ஊரடங்கு உத்தரவு - கோப்புப்படம்

    வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாவட்ட நிர்வாகம்

    வேலூரில் நாளை முதல் மேலும் ஒரு மாத காலத்திற்கு கட்டுப்பாடுகள் தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,308 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 340 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வேலூரில்  நாளை முதல் மேலும் ஒரு மாத காலத்திற்கு கட்டுப்பாடுகள் தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    *   வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும்.

    * இறைச்சிக்கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும்.

    * வேலூரில் துணிக்கடைகள், நகைக்கடைகள், ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் மட்டுமே இயங்கும்.

    * மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து நாட்களில் இயங்கும்.

    முன்னதாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் ஜுலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×