search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைக்கு சீல்
    X
    கடைக்கு சீல்

    சத்துவாச்சாரியில் தடையை மீறி திறந்த இறைச்சி கடைக்கு சீல்

    சத்துவாச்சாரியில் தடையை மீறி திறந்ததால் இறைச்சி கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே மீன், இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் கடைகளை திறக்க தடை விதித்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் அருகே ஒரு இறைச்சி கடை திறந்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் அந்த பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு இறைச்சி கடையின் உட்பகுதியில் ஓட்டல்களுக்கு மொத்தமாக கொடுக்க கோழி இறைச்சி வெட்டுவது தெரியவந்தது. ஆனால் தடையை மீறி திறந்ததால் அந்த கடையை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கிருந்த 70 கிலோ கோழிக்கறியை பறிமுதல் செய்து அழித்தனர்.
    Next Story
    ×