என் மலர்
செய்திகள்

வீடு புகுந்து கொள்ளை
அரிமளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள்- வெள்ளி பொருட்கள் திருட்டு
அரிமளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள்- வெள்ளி பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளத்தில் வைரவன்செட்டியார் தெருவை சேர்ந்தவர் வைரவன். இவர், தொழில் காரணமாக சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிமளத்திற்கு வந்த வைரவன், தங்கம், வெள்ளி நகைகளை வங்கி லாக்கரில் வைக்க சென்றுள்ளார். காலதாமதம் ஆனதால் நகைகளை லாக்கரில் வைக்க முடியாத நிலையில், அவற்றை வீட்டில் வைத்து விட்டு சென்னை சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கதவை உடைத்து வைரவனின் வீட்டிற்குள் புகுந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து பார்வையிட்ட போலீசார், 15 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். ஆனால் வைரவன் சென்னையில் இருப்பதால், திருட்டு போன நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் குறித்தும், வைர நகைகள் ஏதாவது இருந்ததா என்பது பற்றியும் முழுமையாக தெரியவில்லை.
இது குறித்து வைரவனின் உறவினர் முத்து கொடுத்த புகாரின்பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே திருட்டு நடந்த வீட்டை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் பார்வையிட்டார்.
Next Story






