என் மலர்
செய்திகள்

விபத்து
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - கிராம உதவியாளர் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்ததில் கிராம உதவியாளர் பலியானார்
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த சின்னையன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 42). அத்திவாக்கம் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் காஞ்சீபுரம் கோனேரிக்குப்பம் பகுதி வழியாக மோட்டார்சைக்கிளில் காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை துறைமுகத்தில் இருந்து வந்த ஒரு லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோகன்தாஸ் படுகாயம் அடைந்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். உயிரிழந்த மோகன்தாசுக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்

Next Story