என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 201 பேர் மீது வழக்கு
முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 201 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதை பெரும்பாலானோர் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வும் கொரோனா நோயை பரப்பும் வகையில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூரில் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முக கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக மாவட்டத்தில் மொத்தம் 201 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 96 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இது தவிர நகராட்சி அதிகாரிகளும் முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.

Next Story