என் மலர்
செய்திகள்

தீ
காஞ்சிபுரம் அருகே தீ விபத்தில் அட்டை பெட்டிகள் எரிந்து சேதம்
காஞ்சிபுரம் அருகே அட்டை பெட்டிகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த வேளியூர் கிராமத்தில் தனியார் அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் வெளியே தேவையில்லாத அட்டை பெட்டிகள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை நிறுவனத்தின் வெளியே கொட்டி வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி குமார் தலைமையில் தீயணைப்புதுறையினர் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து மற்ற இடங்களில் தீ பரவாமல் தடுத்தனர். 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
Next Story






