என் மலர்
செய்திகள்

பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் ஆய்வு செய்தார்.
மேல்புவனகிரி அருகே பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி- கலெக்டர் ஆய்வு
மேல்புவனகிரி அருகே பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு, வாய்க்கால் ஆழமாகவும், அகலமாகவும் உள்ளதா? என ஆய்வு செய்தார்.
புவனகிரி:
முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மேல்புவனகிரி ஒன்றியம் தீர்த்தாம்பாளையம் ஊராட்சியில் உள்ள அஞ்சலை அம்மாள் பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்து போய் காணப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று பொதுப்பணித்துறை மூலம் தீர்த்தாம்பாளையம் அஞ்சலை அம்மாள் பாசன வாய்க்காலை தூர்வார முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு, வாய்க்கால் ஆழமாகவும், அகலமாகவும் உள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது பணியாளர்களிடம் இந்த வாய்க்கால் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணிகளை விரைந்து முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர் ரமேஷ், புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் இந்திராதேவி, தீர்த்தாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன், விவசாய சங்க தலைவர் சரவணன், பொதுப்பணித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story