என் மலர்
செய்திகள்

பயணிக்கு சானிடைசர் வழங்கும் கண்டக்டர்
கடலூர் அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு சானிடைசர் வழங்கும் கண்டக்டர்கள்
கடலூர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்படுகிறது.
கடலூர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் 60 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பஸ்களை இயக்கலாம் என அரசு அறிவித்தது. அதன்படி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணிகள் தனிமனித இடைவெளியை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களில் சமூக இடைவெளியுடன் குறைவான பயணிகளை மட்டும் அனுமதிக்கின்றனர். மேலும் பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மண்டலம் கடலூர் கிளை 1 மற்றும் 2ல் பணிபுரியும் நடத்துநர்கள், தங்கள் பேருந்துகளில் ஏறும் பயணிகள் அனைவருக்கும் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்குகிறார்கள். அதன்பிறகே அவர்களுக்கு பயணச் சீட்டு வழங்குகின்றனர்.
நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசர் வழங்குவதால் பொதுமக்கள் பயமின்றி பேருந்துகளில் பயணம் செய்ய முடிகிறது. இதற்காக தமிழக முதல்வருக்கும், அரசு போக்குவரத்து கழகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

Next Story